கண்ணம்மாவை மீண்டும் திருமணம் செய்யும் பாரதி! கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா?
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும், கண்ணம்மாவிற்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதன் சுவாரசிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்ற கண்ணம்மாவைத் தேடி பாரதியும் கிராமத்திற்கு சென்று தங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குஸ்தி போட்டியில் பாரதி கலந்து கொண்டு வெற்றிபெற்ற நிலையில், அவரிடம் தோற்றுப்போன வில்லன் கம்பியால் அவரை தாக்கியுள்ளார்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்த பாரதி பழைய வாழ்க்கையும், குடும்ப நபர்கள் அனைவரையும் மறந்திருந்த நிலையில், தற்போது கண்ணம்மா மீண்டும் காதலிப்பது போன்று நடித்து பழைய நினைவுகளை கொண்டு வந்துள்ளார்.
திருமணத்தில் பாரதியின் பரிசு
இந்நிலையில் பாரதியுடன் சேர மறுத்த கண்ணம்மாவை, தாமரை அறிவுரை கூறி ஒருவழியாக மனதை மாற்றிய நிலையில், இறுதியில் பாரதியுடன் ஒன்று சேர்ந்தார் கண்ணம்மா.
தற்போது இருவரும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், மீண்டும் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில், திருமணத்திற்கு ஜவுளி எடுப்பதற்கு குடும்பத்தினர் செல்லும் நிலையில், பாரதி முகூர்த்த புடவையை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
காரணம் தெரியாமல் குடும்பத்தின் குழப்பத்தில் ஜவுளி எடுக்க சென்ற நிலையில், பாரதியோ கண்ணம்மாவிற்காக அவரே புடவையை நெய்வதற்கு, புடவை நெய்யும் இடத்திற்கு வந்து புடவையை தயார் செய்ய ஆரம்பித்துள்ளார்.