தாயின் காதலனால் கண்ணம்மாவுடன் ஒன்று சேரும் பாரதி? பாரதி கண்ணம்மாவில் திடீர் திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் காதலனால் பல திருப்பங்கள் ஏற்பட இருப்பதால் ரசிகர்கள் செம்ம குஷியில் காணப்படுகின்றனர்.
சௌந்தர்யாவின் காதலன்
பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவிற்கு அடிக்கடி தெரியாத நபரிடமிருந்து குறுந்தகவல் வந்து கொண்டிருப்பது காட்டப்பட்டது. இந்நிலையில் புதிய கதா பாத்திரமாக பிரபல நடிகரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சௌந்தர்யா, அவரது கணவர், விக்ரம் மூவரும் ஒன்றாகப் படித்தவர்கள். இந்நிலையில் விக்ரம் சௌந்தர்யாவை காதலித்துள்ளார் அதற்கு முன்னதாகவே சௌந்தர்யாவின் கணவர் முந்திக்கொண்டு சௌந்தர்யாவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். இதை அனைத்தையும் குடும்பத்துடன் பகிர்ந்துகொண்டு கலகலப்பாக பேசி வருகிறார்கள்.
தாயின் காதலால் குஷியில் பாரதி
இந்நிலையில் பாரதி சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவன் என விக்ரமிடம் பாரதி தந்தை கூறுகிறார். மேலும் ஒரு மருத்துவமனையை விலைக்கு வாங்கி அங்கு கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்து வருவதாக பாரதியை பெருமையாக கூறுகின்றார்.
இதைக் கேட்ட விக்ரம் நானும் இது மாதிரி சில உதவிகள் செய்ய வேண்டும் என சொல்ல, பாரதி ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து பாருங்கள் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என கூறுகிறார்.
மறுபக்கம் வெண்பா வக்கீலை சந்திக்கிறார். அப்போது பாரதி, கண்ணம்மா இருவரின் விவாகரத்து வழக்கு மிக விரைவில் வர உள்ளதாக கூறுகிறார்.
5 KM ஆம்புலன்ஸ் பின்னால் விடாமல் ஓடிய குதிரை! பிரமிக்க வைக்கும் காட்சி
திருப்பம் ஏற்படுமா?
பாரதிகண்ணம்மா தொடரில் விக்ரமின் புதுவரவால் பல திருப்பங்கள் வரக் காத்திருக்கிறது. அதுவும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் விக்ரம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெண்பாவிற்கு ஒரு போன் கால் அடிக்கடி வருகிறது. அது யார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.