5 KM ஆம்புலன்ஸ் பின்னால் விடாமல் ஓடிய குதிரை! பிரமிக்க வைக்கும் காட்சி
குதிரை ஒன்று ஆம்புலன்ஸிற்கு பின்னாலேயே ஓடுவதை நாம் காணலாம். அந்த வீடியோவை பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சம்பவம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதன் படி., இந்த ஓடும் குதிரையின் சகோதரி குதிரைக்குக் காலில் அடிபட்டுவிட்டதால் அதை உரியச் சிகிச்சை அளிக்க விலங்குகளுக்கான ஆம்புலன்ஸில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குக் கொண்டு செல்லும் போது அதன் சகோதர குதிரை தன் சகோதரி மீது உள்ள பாசத்தால் ஆம்புலன்ஸ் பின்னால் சுமார் 8 கிலோ மீட்டர் ஓடியே வந்துள்ளது. மருத்துவமனை வாசலுக்கு வந்த குதிரை அங்கேயே தன் சகோதரிக்குச் சிகிச்சை முடிவும் வரை காத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெறும் 23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த குறித்து காமெண்ட் செய்த ஒருவர் விலங்குகளுக்கு நம்மை விட அதிக உணர்வுகள் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானம்! ஏராளமான அதிசயத்தை காண்பீர்கள்
This horse ran behind the ambulance taking his sick sister to the veterinary hospital in Udaipur, India. Hospital kept both of them together until the mare recovered. And we think animals have lesser feelings than us …
— Susanta Nanda IFS (@susantananda3) April 2, 2022
(Via Channa Prakash) pic.twitter.com/sgV11DAglE