பாரதிக்கு வெளிநாட்டில் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பு! கலங்கி நிற்கும் கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் விபத்தில் சிக்கிய பாரதிக்கு பழைய நினைவுகள் மறந்துள்ள நிலையில், வெளிநாட்டில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து கடிதம் வந்துள்ளது சீரியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு கிராமத்தில் உள்ள நிலையில், பாரதியும் அங்கு வாழ்ந்து வந்துள்ளார். பின்பு கிராமத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் விபத்தில் சிக்கிய பாரதி பழைய நினைவுகளை மறந்துள்ளார்.
பாரதியை குணப்படுத்த கண்ணம்மா மீண்டும் பாவடை தாவணிக்கு மாறியுள்ள நிலையில், மீண்டும் காதல் காட்சி அரங்கேறி வருகின்றது.
இந்நிலையில் பாரதிக்கு வெளிநாட்டில் மேற்படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அவரது நினைவுகள் மீண்டு வருமா என்ற கேள்வியில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.