பாவாடை தாவணியில் கண்ணம்மா! எதிர்பாராத இறுதிகட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல்
பாரதி கண்ணம்மா சீரியலில் விபத்தில் சிக்கிய பாரதிக்கு பழைய நினைவுகளை கொண்டுவர கண்ணம்மா பாவடை தாவணியில் திருமணமாகாதவராய் மாறியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்ற கண்ணம்மாவைத் தேடி பாரதியும் கிராமத்திற்கு சென்று தங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குஸ்தி போட்டியில் பாரதி கலந்து கொண்டு வெற்றிபெற்ற நிலையில், அவரிடம் தோற்றுப்போன வில்லன் கம்பியால் அவரை தாக்கியுள்ளார்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்த பாரதி பழைய வாழ்க்கையும், குடும்ப நபர்கள் அனைவரையும் மறந்துள்ளார்.
பாரதியை குணப்படுத்த கண்ணம்மா
ஆரம்பத்தில் பாரதியை குணப்படுத்த ஒத்துக்கொள்ளாத கண்ணம்மா தற்போது பாவாடை தாவணியில் வந்து அசத்தியுள்ளார்.
அதாவது பாரதியின் பழைய நினைவுகளை கொண்டுவருவதற்கு கண்ணம்மா திருமணமாகாமல் இருக்கும் போது பாரதியை சந்தித்த காதலால் அவரது பழைய நினைவுகளை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளார்.
இறுதி கட்டத்தை நோக்கி நகரும் பாரதி கண்ணம்மா சீரியலில் குறித்த திருப்பத்தினை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.