சூரியப் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!
ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ராசி மாறும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். நவகிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன், அக்டோபர் 17ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் ஏற்கனவே அங்கு இருப்பதுடன், புதனும் இணைந்திருப்பதால் திரிகிரக யோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது.
அக்டோபர் மாத சூரியப் பெயர்ச்சியால் உருவாகும் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்கலாம்.
திறமைகளை வெளிப்படுத்தவும், புதிய தொழிலைத் தொடங்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். பணம் தொடர்பான முடிவுகள் நல்ல லாபத்தைத் தரும். நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசியின் இரண்டாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானம் அதிகரிக்கலாம். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவும், தொழிலில் முன்னேற்றம் அடையவும் வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் புதிய நட்புகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம்.நிதி நிலைமை மேம்படும். இருப்பினும், அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்

கும்ப ராசியின் ஒன்பதாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன், தொழிலை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் அமையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |