வெளியானது டிஎன்ஏ ரிசல்ட்! பரபரப்பான பாரதி கண்ணம்மா ப்ரொமோ காட்சி
பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் டிஎன்ஏ ரிசல்ட் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், குறித்த சீரியல் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
டி என் ஏ ரிசல்ட்
இந்நிலையில் வெண்பாவின் திருமண நிகழ்வில் பாரதி மாட்டிக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், ரோகித் உண்மையை உடைத்து வெண்பாவை திருமணம் செய்துள்ளார்.
மற்றொரு புறம் பாரதி தனக்கும், லெட்சுமி, ஹேமா மூன்று பேருக்கும் எடுத்த டின்ஏ சோதனை எடுத்துள்ள நிலையில், தற்போது ரிசல்ட் வெளியாகியுள்ளது.
பாரதி எதிர்பார்த்த டிஎன்ஏ ரிசல்ட்டில் மூன்று பேருக்கும் டிஎன்ஏ மேட்ச் ஆகியுள்ளது. பாரதி கதறியழுதுள்ள நிலையில், பின்னனியில் சோகமான பாடல் வெளியாகியுள்ளது.