எழிலின் திருமண மேடையில் முன்னிற்கும் கோபி! அமிர்தாவின் காதலை கரம்பிடிக்க விடுவாரா?
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் யாரை திருமணம் செய்ய போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் மவுசு
பிரபல தொலைகாட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஆரம்பத்தில் குடும்ப வாழக்கை பற்றிய கதையாக இருக்கவும் மக்கள் மத்தியில் நினைத்த வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் தற்போது கோபியின் இரண்டாவது திருமணம் முடிந்ததிலிருந்து கதை வித்தியாசமான கதைக்கருவாக நகர்ந்துச் செல்கிறது.
இந்த சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை“சுஜித்ரா” கதாநாயகியாக இல்லத்தரசிகளின் ஆதரவைப் பெற்று வருகிறார்.தொடர்ந்து அவரின் கணவர் கோபியும் தனக்கான கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் தங்களின் முழுப்பங்களிப்பை போட்டு நடித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பாக்கிலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பங்களை மக்களுக்கு கொடுப்பதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சும் கிடைத்துள்ளது.
விறுவிறுப்பாக நகரும் கதைக்கலம்
இந்த சீரியலுக்கென ரசிகர்கள் பட்டாளம் குவிந்து காணப்படுகின்றமையால் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கோபியின் வீட்டிலிருந்த பெயரை பாக்கியலட்சுமியாக மாற்றியதால் கோபிக்கு கோபம் வந்து எழிலை அடிக்கச் சென்றுள்ளார். இதனால் கோபியின் அவர் கட்டிய வீட்டில் யாரும் இருக்கக்கூடாது என அணைவரையும் வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இந்த வீட்டை விற்க போவதாக கூறும் போது எழில் அந்த வீட்டை வாங்கி பாக்கியலட்சுமியின் பெயரை வீட்டிற்கு முன் நிறுத்தப் போவதாக கோபியிடம் சவால் விட்டுள்ளார்.
டுவிஸ்ட்டில் சென்றுக் கொண்டிருக்கும் எழிலின் திருமணம்
இதற்காக பணம் தேடும் போது, எழிலை விலைப்பேசும் அளவில், வர்ஷினி திருமணம் செய்துக் கொண்டால் தல 80 இலட்சம் தருவதாக கூறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழிலின் திருமணத்தை பாட்டியும் செழியனும் மாற்றியமைக்க நினைக்கிறார்கள்.
அமிர்தா ஏற்கனவே திருமணமான பெண் என்பதால் பாட்டிக்கு அவரை பிடிக்கவில்லை. இதனால் மனமுடைந்த எழில் என்ன முடிவு எடுப்பார் என்பது எல்லாருக்கும் ஒரு டுவிஸ்ட்டாக் கொண்டு இயக்குநர் டேவிட் அவர்கள் கதையை நகர்ந்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியொன்று இணையத்தில் கசிந்து வருகிறது.
அதில் வர்ஷினி திருமணக்கோலத்தில் இருப்பதால் அவரை தான் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிட்டதக்கது.