பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பம்! திருமண கோலத்தில் வெளிவந்த ராதிகாவின் புகைப்படம்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமணம் இடம் பெற்று விட்டதாக வெளியாகும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடர் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை பெற்றாலும் தற்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. மேலும் இதில் பாக்கியலட்சுமியாக சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு பாக்கியாவின் நிலை
அதிலும் பாக்கியலட்சுமி வேடம் மக்கள் மத்தில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தொடரில், பாக்கியா கணவனை அவர் வழியில் விட்டுவிட்டு தனித்து செயற்படுகிறார்.
கணவன் கோபி விரும்பியது போல் ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நடக்குமா? நடக்காதா? அல்லது என்ன நடக்கப்போகிறது? என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உள்ளது.
திருமணக்கோலத்தில் ராதிகா...
இந்நிலையில் கோபியின் திருமணத்திற்கு யாரும் சம்மதம் தெரிவிக்கவில்லையென்றாலும் கோபி கண்டிப்பாக ராதிகாவை மணந்தே தீருவேன் என உறுதியாக இருக்கிறார்.
இதேவேளை திருமணக்கோலத்தில் ராதிகாவின் புகைப்படம் சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டதா? என்று ரசிகர்கள் முடிவை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.