பழங்களை சரியான முறையில் சுத்தப்படுத்துகின்றீர்களா? நிபுணர்கள் எச்சரிக்கை
நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்களை சரியான முறையில் சுத்தம் செய்து சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். இறைச்சி போன்ற உணவுப்பொருட்களை சரியாக கழுவப்படாவிட்டால் பல நோய் தொற்றுக்கு ஆளாகிவிடுகின்றோம்.
இதே போன்று பழங்களை சரியாக கழுவாவிட்டால், ஏற்படும் பிரச்சினை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பழங்களை சரியாக சுத்தம் செய்கின்றீரா?
சாப்பிடும் முன்பு பழங்களை சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியமாகும். அவ்வாறு செய்யவில்லையெனில் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
பழங்களை தண்ணீரைக் கொணடு தான் சுத்தம் செய்ய வேண்டும்... பழம் மற்றும் காய்கறிகளை சோப்பு, ப்ளீச் கரைசல்கள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.
ஓடும் நீரை மட்டும் பயன்படுத்தி கழுவினால் மிகவும் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரியாக கழுவாவிட்டால் பழங்கள் காய்கறிகளை வெட்டும் போது தோலில் உள்ள கிருமிகள் உடம்பிற்குள் சென்றுவிடும்.
ஆப்பிள், எலுமிச்சை, பேரீச்சம்பழம், கொய்யாப்பழம் போன்ற பழங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டுமாம்.
பெர்ரி, செர்ரி, பீச் போன்ற பழங்களை நன்கு தேய்த்து கழுவாமல் மெதுவாக அலசி எடுக்க வேண்டுமாம்.
பழங்களை நன்கு கழுவிய பின்பு சுத்தமான துணியை பயன்படுத்தி உலர வைக்க வேண்டும்.
நீங்கள் சாப்பிட விரும்பாத பழங்களை உடனடியாக கழுவ வேண்டாம். அவ்வாறு செய்தால் பழம் மிக விரைவில் கெட்டுப்போய் விடுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |