தண்ணீர் குடிக்க எந்த வாட்டர் பாட்டில் சிறந்தது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியத்தை பாதிக்காத தண்ணீர் பாட்டில் பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தண்ணீர்
நமது உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் அருந்துவது முக்கியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கோடைகாலத்தில் நீரிழப்பு ஏற்படுவதால், சிறுநீர் தொற்று, வயிறு வலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
வீட்டில் இருக்கும் போது இந்த பிரச்சனைகள் அவ்வளவாக தெரிவதில்லை. அதுவே வெளியே சென்றால் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்.
அவ்வாறு வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை தான் நம்மில் பெரும்பாலான நபர்கள் எடுத்துச் செல்வோம்.
நாம் எடுத்துச் செல்லும் பாட்டில் ஆரோக்கியமானதா அல்லது எந்த மாதிரியான பாட்டில்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த வாட்டர் பாட்டில் சிறந்தது?
துருப்பிடிக்காத ஸ்டீல்(எஃகு பாட்டில்) நீண்ட காலம் உழைப்பதுடன், வெப்பத்துடன் வினைபுரியாமல் இருக்கும். BPA அல்லது Phthalates ஆகிய வேதிப்பொருள் இதில் காணப்படாத நிலையில், எந்த நச்சுக்களும் இதிலிருந்து வெளியாகது. உடம்பிற்கு மிகவும் சிறந்ததாகும்.
இதே போன்று கண்ணாடி பாட்டிலிலும் எந்தவொரு நச்சுக்கள், ராயனங்கள் கிடையாது. இதில் வெந்நீர் ஊற்றினாலும் பிரச்சனை கிடையாது. உடையும் வரை தாராளமாக பயன்படுத்தலாம்.
காப்பர் பாட்டிலில் தண்ணீர் அருந்துவது பாரம்பரியமானது என்றாலும், இதனை எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டதுடன், ஆக்சிஜனேற்றம் அடையக்கூடும். இரவில் தண்ணீர் ஊற்றி காலையில் குடிக்கலாம். ஆனால் நாள் முழுவதும் குடிக்கக்கூடாது.
ஜிம் போன்ற இடத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும் சிப்பர் பாட்டிலை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். வாய் வைத்து குடிப்பதால் அடிக்கடி சுத்தம் செய்யவில்லை எனில் பாக்டீரியாக்கள் பெருகுமாம்.
கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. இந்த பிளாஸ்டிக் பாட்டிலானது மைக்ரோபிளாஸ்டிக் என்பதால் சில ரசாயனங்களை தண்ணீரில் வெளியிடும்.
உடலுக்கு ஆரோக்கியத்தை விரும்பும்பட்சத்தில் கண்ணாடி பாட்டில் அல்லது ஸ்டீல் பாட்டில்கள் சிறந்த தீர்வாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |