தொங்கும் தொப்பையை 15 நாட்களில் குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இதை செய்யுங்கள்
கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.
இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்தவகையில் உடலில் அசிங்கமாக தெரியும் தொப்பையை குறைக்க ஒரு சில எளிய செயல்முறைகளை குறித்து விரிவாக காணலாம்.
இந்த செயல்முறையை காலையில் பின்பற்றி வந்தால், குறிகிய காலத்திலேயே உடல் எடையை குறைக்கலாம்.
அதிக கலோரிகளை எரிக்கவும், விரைவாக உடல் எடையை குறைக்கவும் காலையில் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்முறைகளை குறித்து பார்க்கலாம்.
உடற்பயிற்சி
காலையில் எழுந்ததும் முதலில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்று.
நடைபயிற்சி, யோகா, உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள ஆற்றலைத் தூண்டி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
தண்ணீர்
காலை எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து நாளை தொடங்குங்கள். இது கலோரிகளை வேகமாக குறைக்கவும் உதவும்.
மேலும், இதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
காலை உணவு
தினசரி தவறாமல் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ள வேண்டும்.
காலை உணவு உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. காலை உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் சத்தான உணவுகளை சேர்க்க வேண்டும்.
எலுமிச்சை பானம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை குடிப்பது எடையை விரைவாக குறைக்க உதவுகின்றன.
இஞ்சி தண்ணீர்
காலை எழுந்ததும் வெந்நீரில் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால், வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும்.
மேலும், இது தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தேவையான உறக்கம்
தினமும் இரவில் போதுமான தூக்கம் இருப்பது மிக அவசியமாகும். சரியான அளவு உறக்கம் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.