உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவை மிஸ் பண்ணாதீங்க
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். சிலருக்கு இது இயற்கையாக உடலில் இருக்கும்.
நமது வயது அதிகமாக அதிகமாக நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் குறையும். இப்படி குறையும் சக்தியை நாம் எப்படி அப்படியே தக்க வைத்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தி இருந்தால் தான் அது நமது உடலில் எந்த ஒரு தொற்றுக்களும் அண்டாமல் பாரிய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி
மிகையாக சொல்லபோனால் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் போது அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
இதனால் நாம் தினம் தயார் செய்யும் உணவில் மஞ்சள், பால், இஞ்சி, சோம்பு, பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து சமைக்க வேண்டும். நட்ஸ் வகைகளை உண்ணுதல் மிகவும் பயன் தரும்.
அவற்றில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம், புரதம் என ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
தயிரில் வைட்டமின் டி உள்ளது இதனால் இதை உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகுத்தூள் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
இது தவிர காளான் மிகவும் நல்ல உணவாகும். இதில் நோய் எதிர்ப்பு அமைப்புக்குத் தேவையான வைட்டமின் D, B, செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளது.
நீங்கள் பழங்கள் சாப்பிட வேண்டும் என்றால் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. கீரைகளில் முருங்கைக்கீரையும், கரிசலாங்கண்ணி கீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த உணவுகளை மறக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |