கோடையில் உடலை குளிர்விக்கும் மட்டன் சூப்... காய்கறிகள் கலந்து எப்படி செய்வது?
பொதுவாகவே அவைச உணவுகளை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் அசை பிரியர்களின் பட்டியலில் நிச்சம் மட்டன் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ளும்.
கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் உடலில் வெப்பம் அதிகரித்து பல்வேறு நோய் தாக்கங்களை ஏற்படுத்தும்.அதற்கு மட்டன் சிறந்த தீர்வாக அமையும்.
பொதுவாகவே மட்டன் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை கொடுக்கும். கோடை காலத்துக்கு உகந்த வகையில் காய்கறிகளும் கலந்து மட்டன் சூப் எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 2 கப்
முட்டை - 1
காய்கறிகள் - 1/2 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
இஞ்சி துண்டு - 1
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/4 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
கடலை மாவு - 1/2 தே.கரண்டி
சோள மாவு - 2 தே.கரண்டி
வெண்ணெய் - 1/2 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து மிதமான தீயில் கடலை மாவை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டப்பட்ட மட்டனில் வறுத்த கடலை மாவு மற்றும் மசாலாக்களை சேர்த்து நன்றாக கலந்து 10-15 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து வெண்ணெய் ஊற்றி அது உருகியதும் அதில் தயார் செய்து வைத்துள்ள வெங்காயம்-இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின் அதில் மரினேட் செய்த மட்டனை போட்டு 3 முதல் 5 வரை விசில் வரும் வரையில் நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரஷர் குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் 2 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் சோள மாவு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
பின்னர் குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் வேகவைத்த மட்டனை போட்டு நன்றாக கலந்து மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வேகவைத்து இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்கினால் ஆரோக்கியம் நிறைந்த மட்டன் காய்கறி சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |