உங்க கேள்பிரண்ட்டை மயக்க கம்பீர தாடி வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க..!
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு ஆண்கள் தாடி வைத்திருந்தால் தான பிடிக்கும். மேலும் ஆண்கள் என்றால் தாடி, மீசை இருந்தால் அழகு என பலர் கூறி கேள்விபட்டிருப்போம்.
ஆனால் சில ஆண்களுக்கு ஹார்மோன்கள் மற்றும் பயோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைப்பாடு காரணமாக தாடியின் வளர்ச்சி குறைவாக இருக்கின்றது.
இந்த பிரச்சினைக்கு சந்தையிலிருக்கும் போலியான உற்பத்திகளை பயன்படுத்துவதை விட உணவுகளால் சரிச் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் தாடி, மீசை வளர்ச்சி குறைவாக இருக்கும் ஆண்கள் இது போன்ற உணவுகளை தினமும் எடுத்து கொண்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
தாடி, மீசை வளர வைக்கும் சில உணவுகள்
1. வேர்க்கடலை
தாடி, மீசை இல்லாதவர்கள் வேர்க்கடலை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனின் வேர்க்கடலையில் நியாசின், ஃபோலிக் அமிலம் மற்றும் பயோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.
இந்த கடலை சாப்பிடுவதால் முடியின் நார் வளர்ச்சியடைகின்றது. வேர்க்கடலை வறுத்து எடுத்து கொள்ளலாம். ஆனால் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
2. உருளைக்கிழங்கு
சாப்பிடும் போது உருளைக்கிழங்கு அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். இதில் பசையம் இல்லாத கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
இதிலிருக்கும் DHT மற்றும் டெஸ்டோஸ்டிரோன் தாடி, மீசையின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது. அந்த வகையில், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் உணவோடு அவற்றை உண்ணுங்கள்.
3. இலவங்கப்பட்டை
தாடி, மீசை வளர்ச்சி தடைப்படும் போது பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் ஆகிய குணங்களால் தடைப்படலாம்.
இலவங்கப்பட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பமடைந்து முடியின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. இதனை வெறும் வயிற்றில், காலையில் தேன் மற்றும் வெதுவெதுப்பான நீருடன் இதனை எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |