முதல் காதலினால் தாடி, மீசையுடன் திரியும் 3 ராசிக்காரர்கள்! இதில் உங்க ராசி இருக்கா?
வாழ்க்கையில் முதல் காதல் என்பது மிக முக்கியமானதாகும். காதலில் தோற்றுவிற்றால் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருக்கும்.
இதனால் காதலிக்கும் போது தன்னுடைய துணையின் ராசியை தெரிந்து கொண்டு நமக்கான பொருத்தம் எப்படி இருக்கின்றது?
என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒத்துழைப்பு தராத துணையுடன் சேரும் போது தினமும் ஒரு பிரச்சினை எழுந்து கொண்டே இருக்கும்.
காதலிக்கும் முன்னர் உங்கள் பெயர் என்ன? என கேட்கும் போது நீங்க எந்த ராசி என கேட்டு வைத்து கொள்வது சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில் முதல் காதலில் மீசை,தாடியுடன் திரியும் ராசிக்காரர்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மீசை, தாடியுடன் திரியும் ராசிக்காரர்கள்
1. மேஷ ராசிக்காரர்கள்
மேஷ ராசிக்காரர்கள் அன்பை அனுபவிக்கும் உற்சாகத்தில், இதனால் வரும் பின் விளைவுகளை பார்க்கமாட்டார்கள். பொறுமையின்மை அதிகமாக இருக்கும் இதன் காரணமாக எல்லா நேரங்களிலும் யோசிக்காமல் செயற்படுவார்கள். இவ்வாறு இருக்கும் போது சில சமயங்களில் காதல் தோல்வி ஏற்படலாம்.
2. மிதுன ராசிக்காரர்கள்
மிதுன ராசிக்காரர்கள் அடிக்கடி சிக்கலில் மாட்டி கொள்வார்கள். இதன் காரணமாக சீக்கிரம் அவர்களிடம் இருந்து பிரிந்து சென்று விடுவார்கள். ஆனால் ஒரே துணையுடன் இருக்கமாட்டார்கள் அடுத்தடுத்த உறவுகளை இவர்கள் மனம் தேடிக் கொண்டே இருப்பார்கள். முதல் காதலின் உறுதித் தன்மையை இழந்து, அந்த உறவையும் இவர்கள் இழக்க நேரிடும்.
3. சிம்ம ராசிக்காரர்கள்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என அதிகம் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.தங்கள் துணையின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள மறந்து விடுவார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படும். சிம்ம ராசிக்காரர்களின் முதல் காதல் நிலையானதாக இருக்காது.