இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா? இதை குடித்தாலே போதும்
இரவு தூங்கும் முன்பு இந்த பானங்களை பருகினால் எந்தவொரு தொந்தரவு இல்லாமல் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு சில பானங்கள் உதவியாக இருக்கும்.
இரவு தூக்கம்
ஒரு மனிதனுக்கு இரவு தூக்கம் என்பது மிகவும் முக்கியம் ஆகும். இரவு நாம் எந்த அளவிற்கு நன்றாக தூங்குகின்றோமோ அந்த அளவிற்கு மறுநாள் சுறுசுறுப்பாக இருக்கும்.
இன்றைய காலத்தில் நாம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும், திரையில் அதிக நேரம் செலவிடுவதால், இது தூக்கத்தை பாதிக்கவும் செய்கின்றது.
எனவே நல்ல தூக்கத்தை பெற விரும்பினால் தினமும் தூங்க செல்வதற்கு முன்பு, இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானங்களில் ஒன்றை நீங்கள் பருகலாம்.
இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா?
சூடான பாலில் இருக்கும் அமினோ அமிலம் நல்ல தூக்கத்திற்கு உதவுகின்றது. எனவே, தூங்கும் முன்பு ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் அளவிற்கு சூடான பாதாம் பால் குடிக்கலாம். இது இரவில் நிம்மதியாக தூக்கத்தை கொடுக்கின்றது.
camamila சூடான வெந்நீரில் போட்டு மூன்று நிமிடம் கழித்து வடிகட்டி குடித்தால், இரவில் நன்றாக தூங்குவீர்கள்.
சூடான தண்ணீரில் Lavender டீ பேக் அல்லது மொட்டுக்களை போட்டு சிறிது நேரம் களித்து குடித்தால், இரவில் நல்ல தூக்கத்தை பெறலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அதில் அஸ்வகந்த வேரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்த பின்பு வடிகட்டி, அதில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |