புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க
தற்காலத்தில் சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோயாகும். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது.

அனைத்து புற்றுநோய்களும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பிரிதலைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றன. இது ஒரு உயிர் கொல்லி நோய் என்பதால் பலருக்கும் புற்றுநோய் குறித்த அச்சம் பெருமளவில் காணப்படுகின்றது.
இந்த ஆபத்தான நிலைக்கு போகாமல் தடுக்கவும் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கவும் நாம் உணவு முறையிலும் வாழ்க்கை முறை பழக்கங்களிலும் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்.

நம் தினசரி உணவில் சில ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும் முக்கிய உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோயை எதிர்த்து போராடும் உணவுகள்

பெர்ரி வகை : இவற்றில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஸ்டிராபெர்ரி, ப்ளூபெர்ரிகளில் இருக்கும் ஆந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இது புற்றுநோய் செல்களை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

காலிஃபிளவர்: முட்டைக்கோஸ், காலே ஆகியவற்றில் ஆற்றல்மிக்க புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகளாகும். இதில் உள்ள சல்ஃபோராபேன் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற துணைப்புரிவதுடன் வீக்கத்தை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது. இது புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சியைக் தடுக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ப்ரோக்கோலி: மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல் ஆகிய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் ப்ரோக்கோலி முக்கிய உணவாக அறியப்படுகின்றது. மேலும் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், ஹார்மோன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

பூண்டு: பூண்டில் இருக்கும் ஆலிசின் என்னும் மூலக்கூறு உடலில் டிஎன்ஏ -வை ரிப்பேர் செய்யவும். உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. புற்றுநோய்க்கு மிக முக்கியக் காரணமே இந்த இன்ஃபிளமேஷன்கள் தான். அதைக்கட்டுப்படுத்துவதில் பூண்டு ஆற்றல் காட்டுகின்றது.

கேரட்: கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள் தான் புற்றுநோய்க்கு எதிராக செயற்படும் முக்கிய வேதிப்பொருளாகும். கேரட்டில் இருக்கும் பண்புகளும் பூண்டைப் போலவே புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |