தினமும் வெறும் வயிற்றில் 30 நிமிடம் நடைப்பயிற்சி: இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது.
தினசரி வெறும் வயிற்றில் 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிவதுடன் பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றது. அது குறித்து தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை நடைப்பயிற்சியின் நன்மைகள்
தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வதால் உடலில் ஆற்றல் மேம்படுத்தப்படுவதுடன் புத்துணர்வும் கிடைக்கின்றது.
தினசரி இவ்வாறு நடைப்பயிற்சி செய்வதனால் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பு விரைவில் கரைக்கப்படுகின்றது. இதனால் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.
காலையில் வெறும் வயிற்றில் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியத்துக்கு பெரிதும் நன்மை பயக்கின்றது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவும் துணைப்புரிகின்றது.
வெறும் வயிற்றில் அதிகாலை நடைப்பயிற்சி செய்வதால் செரிமான அமைப்பு சீராக இயங்குகின்றது.இது வயிற்று தசைகளின் இயற்கையான சுருக்கத்தை ஊக்குவிக்கிறது.மேலும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை முன்கூட்டியே தடுப்பதற்கும் இது சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.
காலை நடைபயிற்சி பகலில் சுறுசுறுப்பாக இயங்க பெரிதும் துணைப்புரிகின்றது. இதனால் இரவில் சரியான நேரத்துக்கு தூக்கம் வரும். உடல் சோர்வின்றி இயங்கினால் சரியான நேரத்துக்கு உடல் தானாகவே ஓய்வை எதிர்பார்க்கும்.
அதனால் இரவில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உங்கள் தினசரி வழக்கத்தில் 30 நிமிட காலை நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மேலும் தினசரி நடைப்பயிற்சி செய்வதால் மூளையின் நினைவாற்றல் மேம்படுவதுடன் மன அழுத்தமும் குறைவதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தினசரி வெறும் வயிற்றில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இன்றியமையாதது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |