நீக்க முடியாத தோஷங்களை ஒரு நொடியில் போக்கும் கருட பகவானின் வழிபாடு!
பொதுவாக நாம் வழிப்படும் கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என புரான கதைகள் கூறுகிறது.
கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் அடங்கியவராக திகழ்கிறார்.
மேலும் கருட பாகவானை வழிபடும் பக்தர்களுக்கு மேற்குறிப்பிட்ட அனைத்து ஐஸ்வர்யங்களும் கைக்கூடும் என பக்தர்களின் நமிபிக்கை.
இதன்படி, கருடனுடைய மகிமை நிறைந்து பாடல்கள் மற்றும் புராணங்கள் என்பவற்றை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.
இவரை கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் எனும் பெயர்களால் அழைப்பர்.
தொடரந்து கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, கதிர்ப்பச்சை, சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வதால் தீராத நோய்கள் மற்றும் பிரச்சினைகள் தீரும்.
அந்த வகையில் கருடனின் வழிபாட்டினால் நாம் பெறும் பலன்கள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.