மிதுனத்தில் பயணிக்கும் குரு: இம்மாதம் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் மிகவும் முக்கயமான கிரகமாக காணப்படுகிறார். இவர் ஒரு ராசியில் உச்ச நிலையில் இருக்கும் போது அந்த ராசிகள் அனைத்து இன்பங்களையும் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் மூலம் கூறுகின்றனர்.
வர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14ம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசியில் நுழைந்துள்ளார் என கூறப்படுகிறது.
அந்த வகையில் குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் 3 ராசிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத விடயங்கள் நடக்கப்போகின்றது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி | குருபகவான் இடமாற்றத்தின் மூலம் உங்களுடைய புதிய திட்டங்கள் வெற்றி பெறும். பல நிலை சொத்துக்கள் வாங்க வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு வழக்கு சம்பந்தம் இருந்தால் உங்களுக்கு வசப்படும். பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. |
ரிஷப ராசி | குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அமரப் போகின்றார். இது வரை இருந்த நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கண்டங்கள் இருந்தால் இம்மாதத்துடன் நீங்குமாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு கொட்டும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது. |
மிதுன ராசி | குரு பகவானின் அதிர்ஷ்ட பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நல்ல செய்தி உங்களை தேடி வரும். இதுவரை இருந்த அனைத்து சிக்கலுக்கும் ஒரு முடிவு கிடைக்கப்போகின்றது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பணக்கார யோகங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).