சிறுநீர் கழிக்கும் போது நீர்கடுப்பு உணர்வு இருக்கா? உடனே சரிச் செய்யும் பாட்டி வைத்தியம்
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு இருக்க வாய்ப்பு உள்ளது.
இது வயது மற்றும் பாலினம் வேறுபாடு காரணமாக இருக்காது. யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். இந்தப்பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக பாதிக்கிறது.
சிறுநீர் கழிக்கும் பொழுது எரியும் உணர்வு ஏற்படுவதற்கு அதிக வெப்பம், தண்ணீர் குறைவாக உட்கொள்வது, சிறுநீரக கற்கள், தொற்று, சூடான மற்றும் காரமான பொருட்களை உட்கொள்வது உள்ளிட்டவை காரணங்களாக பார்க்கப்படுகிறது.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வு இருப்பின் அதனை “சிறுநீர் பாதை தொற்று” என்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து வில்லைகளை எடுத்துக் கொள்வதை விட வீட்டிலுள்ள பொருட்களை வைத்து வீட்டு வைத்தியம் செய்யலாம். இதனால் நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
அந்த வகையில், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் என்னென்ன வீட்டு வைத்தியங்களை செய்து கட்டுக்குள் வைக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
நீர்க்கடுப்பு பிரச்சினையுள்ளவர்கள் வெள்ளரிக்காய் அடிக்கடி சாப்பிடலாம். ஏனெனின் வெள்ளரிக்காயில் உள்ள அதிகப்படியான தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும்.
வெள்ளரிக்காயை உட்கொள்ளும் ஒருவருக்கு சிறுநீர் தொற்றுக்கள் வருவது குறைவாக இருக்கும். சிறுநீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எளிதில் நீக்கும் ஆற்றல் வெள்ளரிக்காயில் உள்ளது. சிறுநீர்ப்பையை சுத்தமாக்கும். இதனால் தொற்றுக்களின் பாதிப்பும் குறையும்.
எலுமிச்சைப் பழச்சாறு
எலுமிச்சைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றை கட்படுத்துகிறது. எலுமிச்சை சாறு சிறுநீரை சற்று காரத்தன்மை கொண்டதாக மாற்றும். அதே சமயம், பாக்டீரியா வளர்ச்சியையும் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |