பூண்டை இப்படி சுட்டு சாப்பிடுவதால் ஏராளமான பலன்கள் கிடைக்குமாம்!
பூண்டு நம் அனைவரின் சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்வு பொருட்களில் ஒன்றாகும்.
இது பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் சமையலில் பூண்டு விழுதை சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் நீங்கள் பூண்டை வறுத்து கூட சாப்பிடலாம்.
அந்தவகையில் தற்போது வறுத்த பூண்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
செய்முறை
பூண்டு தலையின் வெளிப்புற தோலை மட்டும் உரித்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்பு அதன் பூண்டு பற்களை தனித் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் பூண்டு பற்களை சேர்க்கவும்.
பிறகு அதன் மேல் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் சிறிது உப்பை தூவி, அது பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும்.
நன்மைகள்
- ஆரோக்கியமான குடலை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செரிமானத்தை எளிமை ஆக்குகிறது.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
- சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
- இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. மேலும் பூண்டு நச்சுகளை வெளியேற்றுவதற்கு பயன்படுகிறது.
- இதன் மூலம் பூண்டு இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. அந்தரங்க வாழ்க்கையை இனிமையாக்கும்.
- பாலியல் ஹார்மோன்களை தூண்டும் ஆற்றல் இந்த பூண்டுக்கு உண்டு.