பைரைட் காப்பு போட்டால் அதிர்ஷ்டமா? நீங்களும் போட்டு பாருங்க
மனிதர்களாக பிறந்த அனைவரும் மகிழ்ச்சியாக தனக்கு கிடைத்த வாழ்க்கையை தன்னிறைவாக வாழ நிச்சயம் பணம் தேவைப்படும். பணம் எப்போதும் தானாக தேடி வராது, அதை அடைவதற்கு கடின உழைப்பும், முயற்சியும் தேவைப்படுகிறது.
ஜோதிடத்தின்படி, கடுமையான உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் இருந்தால் அவர் வாழ்க்கையின் வெற்றியாளனாக இருப்பார். ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க கிரகங்கள் உதவினாலும் சில பொருட்களை உடன் வைத்திருப்பது கடவுள்களின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது.
“அதிர்ஷ்டப் பொருட்கள்” எனக் கூறும் பொழுது வாஸ்து தொடர்பான பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் சில அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை உள்ளடங்கும். அதிர்ஷ்டக் கற்களை பூமியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
வழக்கமாக நாம் பார்க்கும் விலையுயர்ந்த பொருட்கள் பூமியில் விளையும் கற்கள், பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், சக்தியையும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த பொருட்களில் ஒன்றாக இருக்கும் பைரைட் கற்களை அணிந்தால் ஏராளமான பலன்களை பெறலாம். அப்படியாயின், பைரைட் காப்பு அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பைரைட் கல் என்றால் என்ன?
“பைரைட் கல்” தங்கம் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இயற்கையாக கிடைக்கும் இரும்பு-டை-சல்பைடு கனிமமாகும். தங்கத்துக்கும் இதற்கு ஒரு சில ஒற்றுமை உள்ளது.
பெரும்பாலும் "Fool's Gold" என்று அழைக்கப்படும் பைரைட் கல் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மின்னும் வகையிலும் இருக்கும். தங்க நிறத்தால் பல நூற்றாண்டுகளாக மக்களால் பயன்படுத்தி வருகிறார்கள். "பைரைட்" என்ற பெயர் கிரேக்க வார்த்தையான "பைர்", அதாவது "நெருப்பு" என்பதிலிருந்து பெறப்பட்டது.
பலன்கள்
1. பைரைட் கல் அணியும் ஒருவருக்கு சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களே சமாளிக்கும் ஆற்றல் வரும். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைவதில் உதவியாக இருக்கும்.
2. இது போன்று காப்புக்கள் அணியும் ஒருவரின் நம்பிக்கையில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு இருக்கும். பைரைட் காப்பு அணியும் பொழுது வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
3. பைரைட் கற்கள் தெளிவான மன ஆற்றலை உண்டுபண்ணும். மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தேர்வுகள் மற்றும் பிற முக்கியமான சம்பவங்களின் போது கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ளும். நினைவாற்றலை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. பைரைட் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளும். அணிபவரின் கவசமாக செயற்படும்.
5. சிலர் தங்கிளின் சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள இது போன்ற காப்புக்களை அணிவார்கள். அதே சமயம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் ஆற்றல் பைரைட்டுக்கு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |