ஒரு ஸ்பூன் நெய்! உள்ளங்காலில் மசாஜ்... என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக சரும அழகிற்காக பெரும்பாலான நபர்கள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒன்று தான் மசுாஜ். மசாஜ் செய்வதால் நமது முகத்தில் அபரிமிதமான பளபளப்பு கிடைப்பதாக தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் உள்ளங்கால்களை நெய்யால் மசாஜ் செய்யும் வழக்கம் ஆயுர்வேத சிகிச்சை முறையில் காணப்படகின்றது. இவ்வாறு செய்வதால் என்னென்ன நன்மைகள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உள்ளங்காலில் நெய் மசாஜ் செய்வதால் நன்மை
உள்ளங்காலில் நெய் கொண்டு மசாஜ் செய்வதால் முகத்தில் பொலிவு கிடைப்பதுடன், சரும பிரச்சினைகளும் தீர்கின்றதாம்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், உள்ளங்கால்களில் நெய் கொண்டு மசாஜ் செய்தால் நல்ல தூக்கத்தினை பெறலாம்.
தூங்கும் போது குறட்டை விடுபவர்கள் இரவில் உள்ளங்கால் நெய்யினால் மசாஜ் செய்தால், குறட்டை தொல்லையிலிருந்து விடுபடலாம்.
வயிற்று பிரச்சினை மற்றும் அஜீரணம் உள்ளவர்கள் மற்றும் மனதை இளகுவாக வைப்பதற்கும் உள்ளங்கால் நெய் மசாஜ் உதவியாக இருக்கின்றது.
உடல் எடையையும் குறைப்பதற்கு இந்த மசாஜ் பயன்படுகின்றதாம்.
தற்போது நெய் விலை அதிகமாக இருப்பதால் நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் மற்றும் கோகம் வெண்ணெய் இவற்றினை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
நெய் மசாஜ் செய்வது எப்படி?
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து, உள்ளங்காலில் மசாஜ் செய்யவும். பாதம் சூடாகும் வரை இவ்வாறு மசாஜ் செய்வதால், சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தினை பெறலாம்.