கர்ப்ப கால தழும்புகளுக்கு தீர்வு வேண்டுமா? அப்போ கோகோ பட்டர் தான் பெஸ்ட் சாய்ஸ்
பொதுவாகவே பெரும்பாலான அழகுசாதன பொருட்களின் பிரதான மூலப்பொருளாக காணப்படும் கோகோ பட்டர் சருமத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது.
கோகோ பட்டர் எனப்படுவது என்ன? அதனால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோக்கோ பட்டரின் நன்மைகள்
கோக்கோ பட்டர் என்பது சருமப் பராமரிப்பு அழகு சார்ந்த துறையில் சரும அழகை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிற மிக முக்கியமானப் பொருளாக காணப்படுகின்றது.
கோகோ காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த கோகோ பட்டர் சருமத்துக்கு மிகச்சிறந்த மாய்ஸ்ச்சரைஸராகச் செயல்படும். இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன.
சருமத்துக்குத் தேவையான பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, கொப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் என சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு தாதுக்கள் இதில் அடங்கியுள்ளது.
கோக்கோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன.
இதில் இருக்கும் 'பைட்டோ கெமிக்கல்கள்' எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.
எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோக்கோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம். சருமத்தின் மீது கோக்கோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன. சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோக்கோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளில் அதிகமாக காணப்படுகின்றது.
கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம். கோக்கோ வெண்ணெய் ஸ்ட்ரெச் மார்க் வரித்தழும்புகளை தடுக்கிறது.
மேலும் வடுக்களை நீக்குகிறது. கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உடலில் கோக்கோ பட்டர் தடவிவந்தால் அதன் ஈரப்பதமூட்டும் தன்மை தோல் இழுப்படுவதை தடுக்கின்றது.
இதனால் தழும்புகள் ஏற்படுவதை குறைகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காணப்படும் தழும்புகள் கூட கோக்கோ பட்டரை பயன்படுத்துவதனால் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |