தினசரி முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது.
அதிக முட்டை சாப்பிடுவது அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தி, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து பலரிடமும் இருக்கின்றது.
அதனால் தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்ற சர்சை நம்மில் பலரிடமும் நிலவுகின்றது.இது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆய்வுத் தகவல்
தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முட்டையை தனியாக சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும். இது உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது.பசியைக் குறைக்கிறது.
கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது. முட்டைகளில் வைட்டமின் டி, அயோடின், பி வைட்டமின்கள் மற்றும் உயர்தர புரதம் உள்ளன. மேலும் முட்டைகள் இருதய நோய்க்கான ஆபத்து காரணியாக கருதப்படுவதில்லை.
முட்டைகள் அதிக சத்து கொண்டவை மற்றும் மலிவு விலையில் கிடைக்கின்றன. ஆரோக்கியமான மற்றும் நிலையான சத்துக்களை கொண்டுள்ளன.
முட்டை இயற்கையான மல்டிவைட்டமின் ஆகும். முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவை உயர்தர புரதம், வைட்டமின்கள் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். கூடுதலாக, முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை மூளை ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்துக்கு துணைப்புரிகின்றது.
தினசரி உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது உடல் ஆராக்கியத்திற்கு அளப்பரிய நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |