பெண்கள் சர்க்கரை சாப்பிடுவதை மொத்தமா நிறுத்தினால் உடம்பில் என்னென்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சர்க்கரை மறைந்திருக்கிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் சர்க்கரையை தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான விடயமாகும்.
சர்க்கரையை முழுமையாக நாம் சாப்பாட்டில் இருந்து தவிர்க்கும் போது உடலில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்கின்றன.
சர்க்கரையை தவிர்க்க முடிவு செய்த பின்னர் அதன் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில், சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை குறைப்பது நல்லதா?
1. சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் பொழுது உடலில் இருக்கும் இன்சுலினின் அளவு கட்டுக்குள் இருக்கின்றது. அத்துடன் டைப் 2 நீரிழிவு தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபெறலாம்.
2. அதிக எடையுள்ளவர்கள் டயட்டின் ஆரம்ப கட்டமாக சர்க்கரையை குறைப்பார்கள். ஏனெனின் இது குறைந்த கலோரிகளை உள்ளெடுக்க உதவியாக இருக்கும்.
3. களைப்பு, சோர்வு, இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் சர்க்கரையை குறைவாக எடுத்து கொள்வது சிறந்தது மற்றும் நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்க உதவியாக இருக்கும்.
4. அடிக்கடி பசி வரும் பிரச்சினையுள்ளவர்கள் முதற்கட்டமாக சாப்பாட்டில் சேர்க்கும் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த வேண்டும், இது பசியை குறைக்கின்றது.
5. சர்க்கரை குறைக்கும் பொழுது பல் துவாரங்கள் மற்றும் ஈறு நோய் ஆகியவற்றிலிருந்து தப்பிக் கொள்ளலாம். அதிகமாக சர்க்கரை கலந்த உணவுகளை எடுத்து கொள்ளும் போது வாய் ஆரோக்கியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
6. அதிகப்படியான சர்க்கரை எடுத்து கொள்ளும் போது முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதான போன்ற தோல் பிரச்சினைகளுக்கு வரலாம். அத்துடன் சருமம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |