பானிபூரி பிரியரா நீங்கள்? இனி கவலைப்படவே வேண்டாம்! பானிபூரி சாப்பிட்டால் நல்லதாம்
இப்போதைய காலத்தில் புது புது உணவுகளும் சாலைகளில் அதிகம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதில் பலரும் விரும்புவது இந்த பானிபூரி.
சாலை உணவங்களில் மாலை நேரத்தில் இந்த பானிபூரியை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்கவே முடியாது.
ஆனால் நம் வீட்டில் பானிபூரியை சாப்பிட்டால் ஆபத்து இனி அதை எல்லாம் சாப்பிடக் கூடாது சாப்பிட்டால் ஆரோக்கியம் கெட்டு விடும் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள் ஆனால் பானிபூரி சாப்பிட்டால் சில ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறதாம்.
பானிபூரியின் நன்மை
பானிபூரியில் இருக்கும் புதினா நீரின் சுவை நமது நாக்கிற்கு மிகவும் இனிமையானது.
பானி பூரியில் கோதுமை மாவு, கோதுமை தவிடு, வேகவைத்த உருளைக்கிழங்கு, புதினா இலைகள், வேகவைத்த கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி சாறு, உப்பு, மிளகாய் மற்றும் மாங்காய் தூள் என்பன பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவையனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை.
பானி பூரி சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.
தண்ணீர் மற்றும் வேகவைத்த பொருட்கள் பானி பூரியில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பானிப்பூரிக்கு பயன்படும் கோதுமை, ரவா, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு என்பவற்றில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது செரிமான அமைப்பையும் பாதுகாக்கிறது.
பானிப்பூரி உண்பதால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகள் குறைந்து உடல் எடையும் குறையும்.
சக்கரை நோயுள்ளவர்கள் கூட இந்த பானிப்பூரியை சாப்பிடலாம் ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.
பானிப்பூரிக்குப் பயன்படுத்தும் புதினா இலையின் சாறு உடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், வாயுப்பிரச்சினை இருப்பவர்களும் வாய் புண் இருப்பவர்களுக்கும் இது நன்மை அளிக்கிறது.
பானிப்பூரியில் இருக்கும் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, உப்பு, சீரகம் மிளகு பொருட்கள் எல்லாம் வயிற்று வலியை குறைக்க உதவும்.
குறிப்பு- வீட்டிலேயே பானிபூரியை தயாரித்து சாப்பிடுவதால் மேற்சொன்ன நன்மைகளை பெறலாம், சுகாதாரமற்ற முறையில் தயாராகும் பானிபூரிகளுக்கு இவை பொருந்தாது, உடல் நலப்பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும்.