இனி டீயுடன் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடாதீங்க! பாரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்
காலையில் எழுந்ததும் தேநீருடன் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடுவதனால், அது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கி விடும். தேநீர் மற்றும் பிஸ்கட்டில் உள்ள சர்க்கரையானது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும்.
கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். ஊட்டச்சத்தை உடல் உறிஞ்சுவதை தடுக்கும். செரிமான பிரச்சினையும் ஏற்படக்கூடும்.

காலையில் வேறு என்ன செய்யலாம்?
ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து வடிகட்டி பருகலாம். இவ்வாறு செய்யும்போது செரிமானம் மேம்படும். வாய்வு தொந்தரவு நீங்கும்.
15 மில்லி கற்றாழைச் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இது இயற்கையான மலமிளக்கியாக செயற்படும்.
தண்ணீரில் பெருஞ்சீரகத் தூளைச் சேர்த்து பருகினால், குடல் வீக்கம் குறையும். செரிமானம் சீராக நடக்கும்.
இலவங்கப்பட்டையை இளநீரில் சேர்த்து பருகினால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
