நீரிழிவு மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுங்கு! எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Healthy Food Recipes
By Rooban Sep 13, 2022 01:45 PM GMT
Report

கோடைக்காலம் வந்துவிட்டால் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.

மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

நன்மைகள்

நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து உண்டால் அத்தனை ருசியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். கூடுதல் சுவைக்கு சர்க்கரை தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

நீரிழிவு மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுங்கு! எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | Benefits Of Palmyra Fruit In Tamil

அல்சர்

உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒரு வகை புண். அல்சரால் அவதிப்படுபவர்கள் கோடையில் உணவு முறையில் கவனமாக இல்லாவிட்டால் மேலும் அதிக வீரியத்துக்கு உள்ளாவார்கள்.

உணவு பழக்கம் மூலமே இதை பெரும்பாலும் குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

நீரிழிவு மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுங்கு! எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | Benefits Of Palmyra Fruit In Tamil

கர்ப்பிணி பெண்

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தின் போது கோடையை சந்தித்தால் தவிர்க்காமல் நுங்கு சேர்க்க வேண்டும்.

இதனால் கர்ப்பக்காலத்தில் செரிமானப்பிரச்சனை நீங்கும். வாந்தி மற்றும் குமட்டல் உணர்வும் உண்டாகாது.

நெஞ்செரிச்சல், அஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற வழக்கமான பிரச்சனைகளின் தீவிரம் கட்டுக்குள் இருக்கும்.

நீரிழிவு மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுங்கு! எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | Benefits Of Palmyra Fruit In Tamil

நீரிழிவு

நுங்கில் சோடியம் மற்றும் பொட்டாசிய தாதுக்கள் உள்ளதால் இவை நீரிழிப்பு அபாயத்திலிருந்து காக்கிறது.

கோடை துவங்கும் போதே தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் பெரும்பாலும் நெருங்காமல் செய்துவிடலாம்.

நீரிழிவு மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுங்கு! எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | Benefits Of Palmyra Fruit In Tamil

கல்லீரல்

தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன.

மேலும், நுங்கு சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். நுங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.  

நீரிழிவு மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுங்கு! எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | Benefits Of Palmyra Fruit In Tamil

தீமைகள்

என்னதான் நுங்கு உடலுக்கு பல விதமான நன்மைகளை கொடுத்தாலும், அளவுக்கு மீறி இதை எடுத்துக்கொள்ளக்கூடாது. இல்லையென்றால், வயிற்றுப்போக்கு, உடல் உபாதை பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்.

அதுவும் கடுக்காயான நுங்கை சாப்பிட்டால், வயிற்று வலி ஏற்படுமாம். எனவே நுங்கை சரியான அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US