நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு தரும் தியானம்- நீங்களும் செய்யலாம்
சாந்தம், மன அமைதி, மகிழ்ச்சி, நல்ல உடல்நிலை, அதிக ஆற்றல்,நேர்மறையான உறவுகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு தியானம் உதவியாக இருக்கிறது.
மன அழுத்தம் மற்றும் கவலையின்றி வாழும் மனிதர்கள் தற்போது இவ்வுலகில் மிகக்குறைவு.
நிம்மதியான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறையுடன் தியானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தியானம் செய்யும் ஒருவருக்கு கணக்கிடலங்காத பயன்கள் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடல், மனம் மற்றும் ஆத்மாவிற்கு ஆழ்ந்த தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வினை தியானம் தருகிறது.
அந்த வகையில் பலரின் நிம்மதிக்கு காரணமாக இருக்கும் தியானத்தின் பலன்கள் என்னென்ன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தியானத்தின் முக்கிய பயன்கள்
1. வெளியில் இருக்கும் அழுத்தங்கள் நமது அமைப்பில் சேர்ந்து விடாமல் தடுக்கிறது.
2. நமது அமைப்பில் சேர்ந்திருக்கும் அழுத்தத்தினை தியானம் வெளியேற்றுகிறது.
இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் வெளிவர முடிகிறது.
உடல் பயன்கள்
1. தியானம் செய்யும் ஒருவருக்கு இன்பம், அமைதி,உற்சாகம், ஆகியவை கிடைக்கும். இதனால் எந்தவித தயக்கமும் இன்றி நீங்கள் நினைக்கும் காரியங்களை சரிவர செய்யலாம்.
2. அதிக ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் தியானம் செய்யும் பொழுது அந்த நோயின் தாக்கம் கணிசமாக குறைகிறது.
3. ரத்த லாக்டேட் அளவினைக் குறைத்து, பதட்டத்திற்கு முடிவு கிடைக்கும். தலைவலி, புண்கள், தூக்கமின்மை, தசை மற்றும் மூட்டு பிரச்சினைகள் போன்ற இறுக்கம் காரணமான ஏற்படும் வலிகளை நீங்குகின்றன.
4. செரோடொனின் உற்பத்தியைக் கூட்டி அதன் மூலம் மனநிலையிலும் நடத்தையிலும் மேம்பாடுகளை உருவாக்குகின்றது.
5. நோய்களை வரவிடாமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
6. பிறந்தது முதல் உங்களுக்கு தனி ஆற்றல் இருக்கும். அதனை தியானம் சரிச் செய்கிறது. உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை தூண்டி விட்டு, வாழ்வில் தேவையானவற்றை சிந்தித்து செயற்பட வைக்கும்.
7. பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியால் அதிகமாக அவஸ்தைப்படுவார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்காமல் உடல் பிரச்சினைகளையும் சரிச் செய்கிறது. அத்துடன் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படுகின்றன.
மன நலப் பயன்கள்
1. தியானம் ஒரு ஆல்பா நிலையினை மூளையில் ஏற்படுத்தி அதன் மூலம் மனதை புத்துணர்வுடனும் மென்மையாகவும் அழகானதாகவும் வைத்திருக்கும்.
2. சிலருக்கு எந்த விடயம் செய்தாலும் ஒருவகையான பதட்டம் இருக்கும். அப்படியானவர்கள் தியானம் செய்யும் பொழுது அவர்களுக்குள் இருக்கும் பதட்டம் குறைகிறது.
3. உணர்ச்சி திடம் கூடும் வகையான பயிற்சியாக பார்க்கப்படுகிறது.
4. சதாரணமாக இருக்கும் ஒருவரின் ஆற்றலுக்கும் தியானம் செய்யும் ஒருவரின் படைப்பாற்றலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தியானம் செய்பவர்களுக்கு அது அதிகமாகவே இருக்கும்.
5. வாழ்க்கையில் பிரச்சினைகள் மட்டுமே உள்ளன. வாழ்வில் சந்தோஷம் வேண்டும் என நினைப்பவர்கள் தியானம் செய்யலாம். இந்த பயிற்சியின் பொழுது உங்கள் மனம் ஆனந்தம் அடைகிறது.
6. உள்ளுணர்வு வளர்வது குறைவாக இருக்கும் பொழுது மனிதர்களால் நிறைய விடயங்களை செய்ய முடியாது. எனவே தியானம் அந்த பிரச்சினைகளை கட்டுக்குள் வைக்கிறது.
7. மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மனத் தெளிவு மற்றும் மன அமைதி இரண்டுமே இருக்க வேண்டும். மன அமைதியாக இருக்கும் வெளியில் இருந்தும் கிடைக்கும் நிறைய விடயங்களை தனக்குள் எடுத்துக் கொள்ளும்.
8. இன்று பலருக்கும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் பெரிதாக தெரிவதால் அவர்கள் அதனை எப்படி சரிச் செய்யலாம் என யோசிக்காமல், அதனால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு நிலையில் தியானம் செய்யும் ஒருவருக்கு பிரச்சினைகள் சிறிதாக இருக்கும்.
9. நாம் நினைத்த இலக்கை அடைவதற்கு மனம் கூர்மைப்பட்டு, கவனம் கூடி, இளைப்பாறல் மூலம் விரிவடைய வேண்டும். இதனை தியானம் சரிச் செய்கிறது.
10. விரிவடையாத கூர்மையான மனம் இறுக்கம்,கோபம் மற்றும் விரக்தியை உண்டாக்கும். ஆகவே உங்கள் மனதை எப்போதும் விரிவடையச் செய்து வைத்து கொள்வது அவசியம்.
11. கூர்மையற்ற விரிவடைந்த மனம் செயலின்மையையும் ,முன்னேற்றமின்மையையும் ஏற்படுத்தும். இதனால் நிறைய சவால்களுக்கு முகங் கொடுக்கலாம்.
12. உங்கள் உள் மனமே உங்களின் மகிழ்ச்சியினை நிர்ணயிக்கிறது. அந்த ஆற்றலை தியானம் உங்களுக்கு கொடுக்கும்.
நிபுணர்களின் கூற்று
தீய பழக்கங்கள் இருப்பவர்கள் அதனை எப்படி சரிச் செய்யலாம் என தடுமாறிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பிரச்சினையை தியானம் கட்டுக்குள் வைக்கிறது என 2015 ஆண்டு டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸ் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தினம் செய்யும் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். அப்போது தான் உடல் ,மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும். இந்த விடயங்களும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தியானத்தின் வகைகள்
• நினைவாற்றல் தியானம்
• கவனம் செலுத்தும் தியானம்
• வழிகாட்டப்பட்ட தியானம்
• அன்பான இரக்க தியானம்
• காட்சிப்படுத்தல் தியானம்
• ஆழ்நிலை தியானம்
• முற்போக்கான தளர்வு தியானம்
மூச்சு தியானம்
மூச்சு தியானம் தியானத்தின் ஆரம்பநிலையாகும். மூச்சுத்திணறல் தியானம் எளிதானது, கற்றுக்கொள்வது எளிது என்பதால் எங்கும் செய்யலாம். தியானத்தின் பயணம் தொடங்குபவர்கள் சிறந்த தேர்வாக இது இருக்கும்.
மூச்சு தியானத்தை உட்கார அல்லது படுக்கும் நிலையில், கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மூச்சில் கவனம் செலுத்தவும், உங்களுடைய மூச்சை உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல ஒரு வசதியான இடத்தைக் கண்டறியலாம்.
நீங்கள் சுவாசத்தை எண்ண முயற்சி செய்யலாம் அல்லது உங்கள் நாசிக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் போது காற்று எப்படி உணர்கிறது என்பதில் கவனம் செலுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |