நிற்கவே நேரம் இல்லாத வாழ்க்கையில் முழு உடல் பரிசோதனை அவசியமா?
தற்போது இருந்து வரும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
நவீன வளர்ச்சி என்ற பெயரில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய மக்களை சோம்பறிகளாக்கி அழகு பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
நாகரிகம் வளர்ச்சி இல்லாத காலங்களில் கூட மனிதர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தார்கள். அவர்களின் இனமும் விருத்தியடைந்தன. ஆனால் தற்போது இருந்து வரும் மோசமான வாழ்க்கை எம்மை நாளுக்கு நாள் மரணத்தின் நாட்களை எண்ண வைக்கிறது.
சிலர், லேசாகத் தலைவலிக்கிறது என்றாலும் உடனே பக்கத்தில் இருப்பவர்கள், “ஃபுல் பாடி செக்கப் பண்ணிக்கோடா..” என ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், எப்போது நம்மை என்ன நோய் தாக்கும் என்ற பயமாகும்.
படித்தவர்களும், படிக்காதவர்களும் நோய் என வரும் பொழுது ஒரு குடையின் கீழ் வந்து விடுகிறார்கள். மக்களிடம் போதியளவு அறிவு இல்லை என பலரும் காரணங்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நகரங்களில் நன்றாக படித்து பல பட்டங்களை பெற்றவர்களும் இன்று போதியளவு ஊட்டசத்து இல்லாமல் தான் வாழ்கிறார்கள்.
உடல் எடை அதிகரித்தால் தான் வாழ்க்கையில் டயட் என்ற ஒன்றையே கொண்டு வருகிறார்கள். அதுவரையில் கையில் கிடைப்பவை அனைத்தும் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்.
அந்த வகையில், முழு உடல் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? அதற்கான அவசியம் தான் என்ன? என்பதனை எமது பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
முழு உடல் பரிசோதனை
சமீபக்காலமாக வீதிகளில் மற்றும் நாம் செல்லும் இடங்களில் ஹெல்த் செக்கப் விளம்பரங்கள் அதிகமாக பார்க்கலாம்.
அதிலும் குறிப்பாக சிலர், வீதிகளில் நடந்து செல்லும்போது, "சார் உங்க வெயிட் செக் பண்ணிக்கோங்க" என்று அழைத்து, உங்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வார்கள்.
அப்போது உங்களை பார்த்து, "கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு", "வெயிட் அதிகமா இருக்கு" என்றெல்லாம் அறிவுரைகளை வழங்கியிருப்பார்கள். இப்படி செய்வதால் மக்களுக்கு ஒருவகையான பயம் உண்டாகும். இதனால் முழு உடல் பரிசோதனை மற்றும் வழக்கமாக செய்யும் பரிசோதனைகள் உள்ளிட்டவைகளை எடுத்து கொள்வார்கள்.
இதுவும் ஒருவகையான விளம்பரமாக பார்க்கப்படுகிறது. நம்முடைய நக்கு எப்படி விளம்பரங்களுக்கு அடிமையாகி விட்டதோ அதே போன்று நமது உடலையும் விளம்பரங்கள் அடிமையாக்க முயற்சிக்கின்றன.
உடலின் மீது அக்கறையுள்ளவர்கள், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் காலங்களுக்கு ஏற்றால் போல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களை பார்த்து எதையும் செய்யாமல் தாமாகவே முன்வந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
முழு உடல் பரிசோதனை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செய்தாலும், அதன் கட்டணங்கள் இடத்திற்கு இடம் வேறுப்படும். முடிந்தவரை நம்பிக்கையான மருத்துவமனைகளில் செய்வது சிறந்தது.
முழு உடல் பரிசோதனை யாருக்கெல்லாம் அவசியம் செய்ய வேண்டும்? இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பரிசோதனை ஏன் அவசியம்?
நோய்கள் எம்மை தாக்குவதற்கு முன்னரே அதனை கண்டறிந்து அடியுடன் அழித்து விட இந்த பரிசோதனைகள் உதவியாக இருக்கிறது. அந்த வகையி், முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) தற்போது உள்ள வாழ்க்கை முறை உதவியாக உள்ளது.
உடலில் மீது அக்கறை எடுத்து கொள்பவர்கள் நோய்களிலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்வார்கள். ஏதாவது நோய் வந்து முற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல லட்ச ரூபாய்களை இழந்தும் பலன் கிடைக்காமல் போய் விடவும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. இப்படியான சிக்கல்கள் வரும் முன்னரே முழு உடல் பரிசோதனை உங்களின் ஆரோக்கியத்தை இன்னும் வலுவாக்கி விடுகிறது.
பரிசோதனைகள்
1. கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள்
2. மார்பக எக்ஸ்-ரே, இ.சி.ஜி ரத்த வகை
3. ரத்த அழுத்தம்
4. ரத்தச் சர்க்கரை அளவு
5. ரத்தத்தில் உள்ள கொழுப்பு
6. யூரியா, கிரியேட்டினின் போன்ற அளவுகள்
7. வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
8. தைராய்டு சுரப்புப் பரிசோதனை
9. கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பரிசோதனை
யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்?
- பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
- மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அந்த நோயின் தாக்கம் இருக்கும்.
- 35 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனைகள் செய்து கொள்வது அவர்களின் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்தும்.
- புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள் ஆகியோர் வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும்.
- ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர்கள் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
நன்மைகள்
1. பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்து கொள்ள முடியும்.
2. இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், பெண்களுக்கு கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை இலகுவாக கண்டுபிடித்து கொள்ள முடியும்.
3. சர்க்கரைநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இதன்மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோயை கண்டுக்குள் வைக்கலாம்.
4. புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை ஆரம்ப நிலையில் கண்டுக் கொள்ள முடியும். அதற்கான சிகிச்சைகளையும் இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |