தினமும் துளசி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் இவ்வளவு பலன்களா?
பொதுவாக மருத்துவம், ஆன்மீகம் என இரண்டு பிரிவுகளிலும் எமக்கு கைக் கொடுக்கும் ஒரே தாவரம் துளசி இலை தான்.
அதுமட்டுமன்றி வழிபாடுகளில் அதிகமாக துளசி இலைக்கு முக்கித்துவம் கொடுப்பார்கள். இவற்றையும் தாண்டி சில நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
துளசி நறுமணம் கொண்டது அதே சமயம், சாப்பிடும்போது லேசான கார சுவையை உணர முடியும்.
இந்த இலைகள் 4-5 காலையில் எழுந்தவுடன் வாயில் போட்டு சுவைக்கும் பழக்கம் இன்று பலரிடம் இருக்கின்றது.
அந்த வகையில் துளசி இலைகளை வாயில் போட்டு இவ்வாறு மென்று சாப்பிடுவதால் அப்படி என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
துளசியின் ஊட்டச்சத்துக்கள்
- கலோரிகள்- 100 கிராம் அளவு
- மாவுச்சத்து - 5.32 கிராம்
- நார்ச்சத்து - 1.6 கிராம்
- சர்க்கரை - 0.3 கிராம்
- புரதம் - 2.2 கிராம்
- கொழுப்புச்சத்து - 0.6 கிராம்
அது மட்டுமல்லாமல் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் பி-காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மேங்கனீஸ் ஆகிய சத்துக்களும் துளசியில் உள்ளன.
பலன்கள்
1. உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு துளசிக்கு உள்ளது. ஏனெனின் துளசியில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் உள்ளன.
2. தற்போது இருப்பவர்கள் அனைவருக்கும் “ஸ்ட்ரெஸ்” பெறும் பிரச்சினையாக இருக்கின்றது. காலையில் எழுந்தவுடன் துளசி சாப்பிடுவதால் ஸ்ட்ரெஸை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழற்சிக்கு எதிரான தன்மையும் உள்ளது.
3. சூழல் வளர்ச்சியால் எமக்கு வெளியில் சென்றால் கூட சுத்தமான சுவாசம் கிடைப்பதில்லை. இது போன்ற நேரங்களில் நகரங்களில் வாழ்பவர்கள் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் சுவாசம் தூய்மையடையும். சுவாசம் தொடர்பான பிரச்சினைகளும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
4. வயிறு உப்புசம் அல்லது செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபெற வேண்டும் என்றால் துளசியை மென்று சாப்பிடுவது சிறந்தது.
5. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள், இதய நோய் கொண்டவர்கள் துளசியை காலையில் எழுந்தவுடன் சாப்பிடலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |