பச்சை காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
தற்போது இருக்கும் மார்டன் உலகில் துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு என சில உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்கின்றோம்.
இதனால் 30 வயதை தாண்டும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இதய நோய்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரித்துள்ளது.
இது போன்ற பாதிப்புக்களை தடுக்க வேண்டும் என்றால் “பச்சை உணவுகள்” சாப்பிடும் பழக்கத்தை உலகளாவிய ரீதியல் அமுல்படுத்த வேண்டும்.
அதாவது காய்கறிகளை சமைக்காமல், கூடுதல் கொழுப்புகள், மசாலாக்கள் சேர்க்காமல் உண்டு உடல் ஆரோக்கியத்தை பெருக்குவது தான் முக்கிய நோக்கமாகும்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
மூல உணவுகள் சாப்பிடலாமா?
மூல உணவுகள் என அழைக்கப்படுவது எந்த விதமான இரசாயன முறையிலும் பதப்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் சில காய்கறி வகைகளை குறிக்கின்றது.
இவ்வாறான உணவுகள் தொடர்பில் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
அதில் எல்லாவற்றிலும் ஒரே முடிவு தான் சமைத்து சாப்பிடும் உணவை விட இயற்கையாக கிடைக்கும் உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப உணவு பழக்கங்களை மாற்றாமல் தமிழர்களின் பண்பாடுகளை கடைபிடித்தாலே எந்தவிதமான நோய்களும் வராது.
மூல உணவு செய்யும் வேலைகள்
- மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் மனதையும் உடலையும் உற்சாகப்படுத்தவும் உதவும்.
- மூல உணவுகள் பொதுவாக கலோரிகளில் குறைவாக இருக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.
- என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றால் ஆரோக்கியமான சருமம், பளபளப்பான முடி மற்றும் மேம்பட்ட கண்பார்வை உள்ளிட்டவற்றை பராமரிக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |