உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கணுமா? அப்போ பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழம் போதும்
இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளவர்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகளுக்கு பதிலாக ஆரோக்கியமான இனிப்புக்களை தெரிவு செய்யலாம்.
அந்தவகையில் இரும்புச்சத்தின் முக்கிய மூலமாக பேரிச்சம்பழம் காணப்படுகின்றது. இது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது.
இரத்த சோகை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பேரிச்சை முக்கிய இடம் வகிக்கின்றது.
பேரிச்சம்பழத்தை தனியாக சாப்பிடுவதை விட பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் அதன் நன்மைகள் இன்னும் அதிகமாகின்றது.
அந்த வகையில் பேரிச்சம்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊரவைத்த பேரிச்சம்பழத்தின் நன்மைகள்
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரப்பதுடன் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் சிறந்த பலன்களை கொடுக்கும்.
தினமும் காலையில் பாலில் ஊறவைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை கொடுக்கின்றது.
இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்துடன் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாற்பட்ட இருமல் பிரச்சினை விரைவில் குணமாகும்.
தினசரி இரவில் பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
மேலும் தூக்கமின்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு பாலில் ஊறவைத்த பேரிச்சம்பழம் சிறந்த தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |