தேங்காய் சாப்பிட்டால் நீரிழிவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வருமா?
பொதுவாக நாம் உணவுகள் சமைக்கும் போது தேங்காய் பயன்படுத்துவோம்.
இந்த பழக்கம் நம்முடைய முன்னோர் தொடக்கம் இருந்து வருகின்றது.
நாம் பயன்படுத்தும் தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
அத்துடன் தேங்காயில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி தேங்காய் பாலில் தாய் பாலிற்கு இணையான சத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு சிறப்புகள் பொருந்திய தேங்காய் என்ன என்ன பலன்களை தருகின்றது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும். மேலும் தேங்காய் எண்ணெய் நினைவாற்றலையும் அதிகப்படுத்துகின்றது.
2. தேங்காய் அதிகமாக சாப்பிடுவதால் இதயம் சார்ந்த நோய்கள் வராது என கூறப்படுகின்றது. அத்துடன்கொலஸ்ட்ராலை கரைத்து உடம்பை திடப்படுத்துகின்றது.
3. சிலருக்கு சில உணவுகள் சாப்பிடும் போது உடம்பில் ஒவ்வாமை ஏற்படும். இதனை தேங்காய் சரிச் செய்கின்றது. ஏனெனின் தேங்காயில் ஆண்டிபயாடிக் அதிகமாக இருக்கின்றது.
4. வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும் போது ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால் போதும். மேலும் மலச்சிக்கலையும் சரிச் செய்கிறது.
5. தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக தொற்றுக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |