தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. அதில், தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது.
தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம். மேலும், தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.
விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விடவேண்டும். தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.