45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தினமும் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தினமும் ஒரு வாழைப்பழம்
வாழைப்பழம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்ககூடிய ஒரு பழமாகும். இது மிக எளிய விலையில் கிடைக்கிறது.
இதனை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அடிக்கடி கிடைக்கும் இந்த பழத்திலும், உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றன.

வாழைப்பழத்தை பலரும், காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடுவர். இது, உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் ஒரு உணவாக கருதப்படுகின்றது.
எனவே தொடர்ந்து 45 நாட்களும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

- 100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில்
- கலோரிகள் : 89 KCAL
- கொழுப்பு : 0.33 கிராம்
- சோடியம் : 1.மில்லி கிராம்
- கார்போஹைட்ரேட் : 22.80 கிராம்
- நார்ச்சத்து : 2.60 கிராம்
- புரதம் : 1.09 கிராம்
- பொட்டாசியம் : 358 மில்லி கிராம் உள்ளிட்டவை உள்ளது.

நன்மைகள் என்ன?
வாழைப்பழத்தில், பொட்டாசியம் அதிகளவில் இருக்கின்றது. இது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, ரத்த அழுத்ததை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை, கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். இதனால் இதை மக்கள் காலை உணவாகவும், உடற்பயிற்சிக்கு முன்னரும் சாப்பிடுவார்கள்.
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளடக்கம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

செரோடோனின் என சொல்லப்படும் ஹார்மோன் சுரப்பை இது தூண்டி, மனநிலையை சீராக்கவும் உதவும். இதில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட்கள் உடலின் செல்களை பாதுகாக்கும்.
இது, உடலை எப்போதும் நீரேற்றுத்துடன் வைத்திருப்பதோடு பசி அதிகமாக ஏற்படுத்துவதையும் குறைக்கும்.
எனவே தொடர்ந்து 45 நாட்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதன் ஊட்டச்சத்துகள் சிரான ரத்த அழுத்தத்திற்கும், மேம்பட்ட செரிமானத்திற்கும், இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவும் எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |