வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? டயட் சீக்ரெட்
பொதுவாக நமது உடலை தினமும் நல்ல நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம்.
இதற்காக காலையில் எழுந்தவுடன் ஒரு டம்பளர் நீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பல் துலக்குவதற்கு முன்பு அல்லாமல், எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாம்.
அப்படியாயின் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்
1. காலை முதல் இரவு வரை உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். பல் துலக்குவதற்கு முன் அல்லாமல் சாப்பிட முன்னர் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
2. தூக்கத்திற்கு பிறகு உடல் நீரிழப்புக்குள்ளாகிறது. காலையில் தண்ணீர் குடிப்பது நீரேற்றத்தை அதிகரிக்கும்.
3. சரும பொலிவுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் காலையில் தண்ணீர் குடிக்கலாம். இது புதிய செல்களை உருவாக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
4. உமிழ்நீரில் உள்ள இயற்கை நொதிகள் பாக்டீரியாக்களை அகற்ற உதவியாக இருக்கிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் செரிமானமும் சீராக நடக்கும்.
5. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
6. காலையில் தண்ணீர் குடிப்பது குடல்களை சுத்தப்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. பல நாட்கள் மலச்சிக்கலால் அவஸ்தை அனுபவிப்பவர்கள் தண்ணீர் குடிப்பதால் சரிச் செய்யலாம்.
7. சோர்வாக இருக்கும் உடலை தண்ணீர் குடிப்பதால் உற்சாகம் அடைகிறது. அத்துடன் உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
8. பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பசி கட்டுபாட்டில் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |