பீட்ரூட் ஜுஸ் யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?
பீட்ரூட் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைய உள்ளதால் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக இருக்க உதவும். இது ரத்தம் அழுத்தத்தை குறைத்து, உடலில் ஆற்றலை அதிகரிக்க கூடியது ஆகும். இதில் உள்ள நைட்ரேட்கள் ரத்த ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்க செய்யும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க உதவக் கூடியதாகும்.
ஆனால் பீட்ரூட் ஜூஸ் அனைவருக்கும் ஏற்றது கிடையாது என சொல்லப்படுகிறது. குறிப்பாக மருத்துவ ரீதியாக சில பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக பீட்ரூப் சாப்பிடவே கூடாது. யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடக் கூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன மாதிரியான பாதிப்புக்கள் ஏற்படும்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் :
குறைந்த ரத்த அழுத்தம் எனப்படும் லோ பிபி கொண்டவர்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் ரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கும். இதனால் ரத்த அழுத்த அளவான மேலும் குறைந்து ஆபத்தாகி விடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் போன்ற ஹைபோடென்ஷன் அறிகுறிகள் அதிகரிக்கலாம்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் :
அதிக அளவிலான ஆக்சாலேட் பொருட்கள் உள்ளதால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக பீட்ரூட் ஜூஸ் சாப்பிடக் கூடாது. ஆக்சாலேட்கள் சிறுநீரக கற்கள் உருவாகம் அபாயத்தை அதிகரிக்க செய்து விடும். ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இன்னும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
சர்க்கரை நோயாளிகள் :
சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இயற்கையாகவே அதில் சர்க்கரை அதிகம் இருக்கும். இதில் கிளைசேமிக் குறைவாக இருப்பதால் சரியான ரத்த அளவை உங்களால் நிர்வகிக்க முடியாமல் போகலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும்.
கர்ப்பிணிகள் :
கர்ப்பிணிப் பெண்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது பாதுகாப்பான விஷயமாக கருதப்பட்டாலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது செரிமான பிரச்சனை ஏற்படலாம் அல்லது ஆக்சலேட் அளவை அதிகரிக்க செய்யலாம். இது பல வகையான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொள்வதற்கு முன் டாக்டரின் ஆலோசனையை பெறுவது மிக அவசியம்.
செரிமான பிரச்சனை இருப்பவர்கள் :
செரிமான கோளாறு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. இதில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால் குடல் வீக்கம், அசெளகரியம், இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமான நிலை இன்னும் மோசமடையவும் வாய்ப்புள்ளது. இதனால் ஏற்கனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மாற்று உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |