மிளகு பாலில் இத்தனை நன்மைகளா... யார் யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா?
தினமும் நாம் உண்ணும் உணவில் சுவைக்காகவும் மருத்துவத்திற்காகவும் சில மசாலா பொருட்கள் சேர்ப்பதுண்டு. அந்த மசாலாப் பொருட்களில் மிளகுவும் ஒன்று.
அந்த மிளகைக் கொண்டு பால் அருந்துவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா?
மிளகு பாலின் நன்மைகள்
மிளகானது அழற்சி மற்றும் மூட்டு வலியை எதிர்க்கிறது. மேலும் இது வீக்கத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது. மேலும் இது வலியைக் குறைக்கும்.
நீண்ட காலமாக இருமலில் அவதிப்படுபவர்களுக்கு மிளகுபால் அருமருந்தாகிறது. இந்த மிளகுப்பால் சளி மற்றும் இருமல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைக் கொடுத்து இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு உதவும். அதிலும் சளிக்கு கருப்பு மிளகு மிகவும் சிறந்தது.
சிலருக்கு தொண்டைத் தொற்றுடன் சளி மற்றும் இருமல் அதிகமாக இருக்கும் இப்படியானவர்கள் ஒரு கிளாஸ் மிளகு பால் குடித்து வந்தால் தொண்டையைக் குணப்படுத்துவதுடன் தொற்றுநோயையும் குணமாக்கும்.
மிளகில் இருக்கும் பைபர் ஆனது புற்றுநோய்க் கட்டிகள் உருவாகுவதை எளிதில் தடுக்கும் தன்மையைக் கொண்டது. இந்த மிளகை மஞ்சள் பாலுடன் கலந்துக் குடித்தால் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய் போன்ற அபாயத்தை குறைக்கும்.
கருப்பு மிளகில் உள்ள பைபரின் குடலில் உள்ள செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. மேலும், இது குடல் அழற்சிக்கு சிகிச்சையளித்து, இயற்கையாக செரிமானத்தை மேம்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |