கரம் மசாலாவை ஏன் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?
மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடுதான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும்.
அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாதான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது.
இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. உணவில் சுவையை சேர்ப்பதை தாண்டி இன்னும் பல விஷயங்களை கரம் மசாலா செய்கிறது. கரம் மசாலா பல தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது.
- இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
- மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், அசிடிட்டி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய ஒரு மசாலா பொருளை தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் எனில் நீங்கள் கரம் மசாலா மீது கவனம் செலுத்தலாம்.
- கரம் மசாலாவில் ஏலக்காயின் நன்மை உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்க கூடியது என்று அறியப்படுகிறது.
- இந்த மசாலாவை உணவில் சேர்ப்பது மூலம் உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்க முடியும். மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
- சில உடல் நல பிரச்சனைகளை தடுப்பதில் நமது உணவே முக்கிய பங்களிக்கிறது.
- புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தடுக்க கூட கரம் மசாலா உதவுகிறது. மேலும் கரம் மசாலா பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.
- எனவே அவை உடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.
கரம் மசாலா செய்வது எப்படி?
அதிகமான மக்கள் கரம் மசாலாவை கடைகளில் வாங்குகிறார்கள்.
இந்தியாவில் கடைகளில் எளிதில் கிடைக்க கூடிய பொருளாகவே கரம் மசாலா உள்ளது.
ஆனால் சிலர் வீட்டிலேயே கரம் மசாலா கலவையை செய்கின்றனர். உண்மையில் கரம் மசாலாவை எளிதாக வீட்டில் செய்ய முடியும். நீங்கள் மசாலா பொருட்களின் விரும்பி என்றால் இதை வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- ஏலக்காய்
- கருப்பு மிளகு
- இலவங்கப்பட்டை
- சீரகம்
- பிரியாணி இலைகள்
இந்த பொருட்கள் இல்லாமல் உங்கள் விருப்பத்தை பொறுத்து சுவைக்காக பெருஞ்சீரகம் போன்ற பொருட்களை சேர்க்கலாம்.
செய்முறை
முதலில் ஒரு கடாயில் மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலா பொருட்களையும் போட்டு அவை உலரும் வகையில் நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு அவற்றை ஆற விடவும்.
பிறகு இந்த மசாலா கலவையை மிக்ஸிக்கு மாற்றி அதை பொடியாக அரைக்கவும். இந்த அரைத்த பொடியை காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கவும்.