கிரீன் டீ-யில் மறைந்திருக்கும் இந்த நன்மைகள் பற்றி தெரியுமா?
கிரீன் டீயில் பல வகை நன்மைகள் அடங்கி உள்ளது. அவைகளில் பல சுவை மணங்களும் பல வீதத்தில் காப்பைனும் அடங்கியுள்ளது.
எந்த கிரீன் டீ அதிக சுவையுடன் இருக்கும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்ததாகும்.
கிரீன் டீ ஆனது ஆன்டிஆக்சிடென்ட் ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும், பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும்.
மூலிகைகள் மற்றும் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப் பட்டை போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கீரீன் டீக்களை தேர்ந்தெடுத்தால் அதிக உடல் நல பயன்கள் கிடைக்கும்.
மேலும், கிரீன் டீக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களும், நீரிழிவு வருவதற்கு முந்திய நிலையில் உள்ளவர்களுக்கும் கிரீன் டீ அருந்தி பயன் பெறலாம்.
கிரீன் டீயில் சிறிய துண்டு எலுமிச்சைச்சாறு பிழிந்து குடிக்கலாம். நச்சுக்களை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிக பட்சம் 2 அல்லது 3 கப் மட்டடுமே குடிக்க வேண்டும்.