வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடித்தால் உடலில் நடக்கும் பெரிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் இவை மருந்தாக நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதை விட ஜுஸ் செய்து குடித்தால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும்.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடித்தால்
நெல்லிக்காய் சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொழுப்பைக் குவிக்காமல் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
நெல்லிக்காயில் குரோமியம் நிறைந்துள்ளது இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தினமும் நெல்லிக்காய் ஜுஸ் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அதிகப்படியான வீக்கம், சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.
நெல்லிக்காயில் கால்சியம் அதிகமாக உள்ளது. இது உங்கள் நகங்கள், எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கிறது, எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது மற்றும் நீங்கள் வயதாகும்போது எலும்பு சேதத்தைத் தடுக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |