வாழை இலையில் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்கள்... என்னென்ன தெரியுமா?
பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயத்துக்கு பின்னும் நிச்சயம் வியக்க வைக்கும் நன்மைகள் நிறைந்திருக்கும் என்பது இன்று அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக காணப்பட்டுள்ளது. அதன் பின்னால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழையிலை சாப்பாடு
வாழை இலையில் கிரீன் டீயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆன பாலிபினால்கள் செறிந்து காணப்படுகின்றது.எனவே தான் வாழையிழை சாப்பாடு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிகன்றது.
வாழை இலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக இருப்தாலும், அதில் உள்ள பாலிபினால்கள், பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைத் தடுப்பதாலும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.
சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது குறித்த ஊட்டச்சத்துகளை உணவு உறிஞ்சிக்கொள்ளும், அது கூந்தல் வளர்ச்சி முதல் வயிற்று புண் வரை பல நல்ல பலன்களை கொடுக்கின்றது.
வாழை இலையில் உணவருந்துவதால், இளஞர்களுக்கு உள்ள இளநரையை போக்க முடியும். வாழை இலையில் தொடர்ந்து உணவருந்தி வந்தால், இளநரை மறைந்து கறுப்பு முடிகள் வளர ஆரம்பிக்கும்.
வாழை இலையில் உள்ள குளோரோபில் எனும் வேதிபொருள், பல நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக பெரிதும் துணைப்புரிகின்றது.
தொடர்ந்து வாழை இலையில் சாப்பிடுவதால், தோல் சார்ந்த நோய்கள் மறைந்து, சருமம் பொலிவாக மாறும்.
வாழை இலையிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் துணைப்புரிகின்றன.
வாழை இலைகளில் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொள்வதால், செரிமான அமைப்பு சீராக செயற்பட ஆரம்பிக்கும். அதனால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்குவதுடன், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.
வாழை இலையில் உள்ள புரதச்சத்து, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் இதனால் நீண்ட காலம் வரையில் இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.
அதுமட்டுமின்றி, வாழை இலைகளில் உள்ள இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உணவைப் பாதுகாக்கும். அதனால் நீண்ட நேரம் உணவு பழுதடையாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |