ஒட்டுமொத்த நோய்களுக்கும் மருந்தாகும் மரமஞ்சள்.. முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக மரமஞ்சள் சித்த மருத்தவத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்கின்றது.
இது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மஞ்சளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும். சாதாரண மஞ்சள் என்றால் அது கிழங்கை பயன்படுத்துவோம்.
ஆனால் மரமஞ்சள் என அழைக்கபடுபவது அதற்கு மேலிருக்கும் வேர் போன்ற கெட்டியான தண்டு பகுதியை தான்.
இதனை வெயிலில் உலர்த்தி அப்படியே தண்டாகவோ பொடியாகவும் நாட்டு மருந்து கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் மரமஞ்சள் அப்படி என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
மரமஞ்சள் செய்யும் மருத்துவம்
1. பிறந்த குழந்தைக்கு வரும் ஒவ்வாமை
சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்த பின்னர் குமட்டி கொண்டே இருப்பார்கள். அது அதிகரிக்கும் பட்சத்தில் வாந்தி எடுப்பார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் சீக்கிரமாக ஒல்லியாகி விடுவார்கள்.
இதனை சரிச் செய்ய வேண்டும் என்றால் மரமஞ்சள் பொடியை கால் ஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, சுண்டக் காய்ச்சி பின் அதை பாலாடை மூலம் குழந்தைககு புகட்டி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் குழந்தைகள் குமட்டால் பால் குடிப்பார்கள். அவர்களின் உடலும் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும்.
2. காயங்களில் உள்ள தொற்றுகள் பரவல்
ஏதோவொரு வகையில் உடலில் எங்காவது காய ஏற்பட்டால் அது வெளியில் மாத்திரமல்ல உடலினுள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது போன்ற தொற்றுகள் ஏற்பட்டால் அரை ஸ்பூன் அளவு மரமஞ்சள் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டு கொதிக்க விட்டு குடித்து வர வேண்டும்.
இப்படி செய்வதால் காயத்தினுள் இருக்கும் தொற்று அழியும். காயம் சீக்கிரம் குணமாகும். அத்துடன் தேங்காய் எண்ணெயுடன் மரமஞ்சள் பொடியை கலந்து காயங்களுக்கு தடவினால் காயங்களும் குணமாகும்.
3. சரும பிரச்சினைகள்
சரும பிரச்சினையுள்ளவர்கள் பொதுவாக விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். இவற்றை போல் மரமஞ்சளும் சரும பிரச்சினைகளுக்கு பயன்படுத்தலாம். முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், அதிகப்படியான சீபம் சுரப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை குணமாக்க மரமஞ்சள் உதவுகின்றது.
இப்படி இருப்பவர்கள், மரமஞ்சள் பொடியை பாலில் கலந்து பருக்கள், கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால் பருக்கள், கரும்புள்ளிகள், பருவால் ஏற்பட்ட தழும்புகள் வேகமாக மறையும்.
4. தசைவலி
உடம்பால் வேலை செய்பவர்களை விட கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகமான உடல் வலி இருக்கும். இவ்வாறு வேலை செய்வதால் தசைகளில் ஏதாவது வலி ஏற்பட்டால் மரமஞ்சளை பயன்படுத்தலாம். அதாவது வெதுவெதுப்பான குளிக்கும் நீரில் 2 ஸ்பூன் அளவு மரமஞ்சள் பொடியைச் சேர்த்து கலந்து குளித்து வர உடல் வலி குறையும்.
5. மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள்
மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் மஞ்சள் நிறத்தை பார்த்தாலே பயம் கொள்வார்கள். ஆனால் மரமஞ்சளை அரைத்து கஷாயம் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமடையும். அத்துடன் எல்லா வகையான கல்லீரல் நோய்களையும் குணப்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |