பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம்.
இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் தேங்காய் மற்றும் இளநீரினால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கின்றன.
அதிலும் குறிப்பாக தேங்காய் முற்றியதும் அதிலிருந்து தளிர் அதாவது சதை பகுதி போன்ற அமைப்பு உருவாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்திலும், மிருதுவான தன்மையிலும், சுவைப்பதற்கு இனிப்பு மற்றும் உப்பு கலந்த சுவையிலும் காணப்படும்.
இப்படி உருவாகும் தேங்காய் பூவை கோவில்கள் போன்ற புனித தலங்களில் பார்க்கலாம். வேண்டுதல்களின் போது தேங்காயில் பூ இருந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக திருமணம், வேலை வாய்ப்பு போன்ற நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும் என்பார்கள்.
அந்த வகையில், இது போன்று தேங்காய் பூவினால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் பூ சாப்பிடுவதால் என்ன பலன்?
1. பெண்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் கர்ப்பப்பை சுத்தமாகும் எனக் கூறப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மினரல், வைட்டமின் ஈ உள்ளிட்ட சத்துக்கள் இந்த பூவிலிருந்து கிடைக்கின்றன.
2. கருவுற்ற பெண்களுக்கு சில சமயங்களில் முதுகு வலி பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சினைக்கு தேங்காய் பூ நிவாரணம் வழங்குகின்றது.
3. பொதுவாக பெண்களுக்கு உடல் வலிமை பெறுவது மட்டுமில்லாமல், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கின்றது. அத்துடன் இதயம் தொடர்பான பிரச்சினையுள்ளவர்களும் தேங்காய் பூவை சாப்பிடலாம்.
4. நார்ச்சத்து, பொட்டாசியம் தேங்காய் பூவில் இருப்பதால் உடல் எடை அதிகம் உள்ளவர்களும் சாப்பிடலாம். அத்துடன் இரத்த சக்கரை அளவிலும் சில மாற்றங்களை கொண்டு வரும்.
5. ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்ட தேங்காய் பூ சாப்பிடும் ஒருவருக்கு சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கப்படும். அதே சமயம், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைத்து பொலிவுடன் வைத்து கொள்ளும்.
6. தினமும் தேங்காய் பூ சாப்பிடுவது பெண்களின் மாதவிடாய் பிரச்சனையிலிருந்து தீர்வு பெறுவார்கள். அத்துடன் வயிற்று வலியும் கட்டுக்குள் இருக்கும். உதாரணமாக தயேரியா மற்றும் டைசென்ட்ரியை ஆகிய பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
7. பெண்களுக்கு சில பல காரணங்கள் காரணமாக தொடர்ந்து வெள்ளைபடுதல் பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சினையுள்ளவர்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் தீர்வை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |