மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தும் ஏலக்காய் டீ.. வெறும் வயிற்றில் குடிக்கலாமா?
பொதுவாக நாம் நீண்ட ஆயுளை நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் உணவுகளில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும்.
நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் தான் பெரும்பாலும் எம்மை எப்படி வாழ வேண்டும் என்பதனை தீர்மானிக்கின்றது. உடலில் நடக்கும் அத்தனை மாற்றங்களிலும் உணவின் பங்கு இருக்கின்றது.
காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் சில உணவுகள் முழுமையான ஆரோக்கியத்தை உடலுக்கு வழங்குகின்றது.
இதன்படி, சமையலறையிலுள்ள ஏலக்காய் செரிமான பிரச்சினை அத்துடன் மலச்சிக்கல் பிரச்சினையை சரிச் செய்கின்றது. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கின்றன.
இப்படி குடிக்கும் பொழுது வெறும் டீயை குடிக்காமல் டீயுடன் ஏலக்காய் சேர்த்து குடித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அந்த வகையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் டீ குடிப்பதால் அப்படி என்னென்ன ஆரோக்கியங்கள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஏலக்காய் டீயின் மகிமை
1. வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளலாம். இதனால் செரிமான சீராக இருக்கும். காலையில் தினமும் இதனை பின்பற்றினால் மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு இப்படியான பிரச்சினைகள் ஏற்படாது.
2. ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றுடன் சேர்ந்து உடல் முழுவதும் சுத்தமாகின்றது. ஏலக்காயில் இருக்கும் டையூரிக் பண்புகள், நச்சுக்கள் மற்றும் அதிகமாக இருக்கும் நீரையை வெளியேற்ற உதவியாக இருக்கின்றது.
3. உடலில் மெட்டபாலிசம் அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துக்கின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஏலக்காய் போட்டு டீ குடித்து வந்தால் கலோரிகள் குறைந்து ஒல்லியாகி விடலாம்.
4. ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஏலக்காயிற்கு அதிகமாக இருக்கின்றது. வெறும் வயிற்றில் டீயுடன் உள்ளே அனுப்பும் பொழுது ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் வாய்துர்நாற்றம் பிரச்சினை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.
5. ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்கின்றன. இதனால் சரும பிரச்சினைகள் ஏற்படுவது குறைய வாய்ப்பு இருக்கின்றது. பொலிவும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |