நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? பதில் இதோ
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பலருக்கும் சாப்பிடலாமா? கூடாதா? என்ற கேள்வி அதிகமாகவே எழும்.
வாழைப்பழம்
பொதுவாக பழங்கள் என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி உண்பார்கள். அதிலும் மிகவும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தினை விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது என்று தான் கூற வேண்டும்.
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளதுடன், பல நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றது.
வாழைப்பழத்தின் சத்துக்கள்
வாழைப்பழங்களில் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பச்சை வாழைப்பழத்தில் காணப்படும் ஸ்டார்ச் ஆனது, கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குவதுடன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.
இனிப்பு சுவையினைக் கொண்ட வாழைப்பழமானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதுடன், செரிமான பிரச்சினையையும் தீர்க்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
ஒரு வாழைப்பழத்தில் ஏறக்குறைய 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை இருக்கிறது. அதே நேரத்தில் இதில் நார்ச்சத்தும் அதிகமாக நிறைந்துள்ளது.
பொதுவாக சர்க்கரை அளவினை நார்ச்சத்து உணவுகள் மழுங்கடிக்கச் செய்கின்றது. ஆதலால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தினை சாப்பிடுவது நல்லது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதனை தாராளமாக எடுத்தக்கொள்ளலாம்.
இன்சுலின் செயல்பாட்டினை மேம்படுத்தும், வாழைப்பழம் இதயத்தை பாதுகாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.